என் பெயரை பயன்படுத்த விரும்பாத தம்பி ; பிரியா வாரியர் வருத்தம் கலந்த பெருமிதம் | பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? | பேண்டசி படத்தில் தர்ஷன் | தமிழுக்கு வரும் கன்னட நடிகை சான்யா | 30 லிட்டர் தாய்பால் தானம் வழக்கிய விஷ்ணு விஷால் மனைவி | இனி இணைந்து பயணிப்போம்: தயாரிப்பாளர் சங்கம், பெப்சி கூட்டுப் பேட்டி | பிளாஷ்பேக்: வாழ்வே மாயத்தை உல்டா பண்ணிய ஆர்.சி.சக்தி | பிளாஷ்பேக்: ஜாதகத்தை விமர்சித்த படம்: 3 மொழிகளில் வெளியானது | மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா' |
கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியவர் தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் 14ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், கூலி படம் எல்சியு படம் என்றும், விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசன் இதில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்கப்பட்டகேள்விக்கு அவர் பதிலளிக்கையில், விக்ரம் படம் எப்படி கமலுக்காகவே உருவாக்கப்பட்டதோ அதேபோல்தான் இந்த கூலி படத்தின் கதையும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் அந்த படத்தின் கேரக்டர் இந்த படத்திலோ அல்லது இந்த படத்தின் கேரக்டர் அந்த படத்திலோ இடம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. கூலி படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உண்மையில்லை என்கிறார் லோகேஷ் கனகராஜ்.