பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

இந்திய சினிமாவில் நம்பர் ஒன் திரைப்படமாக இப்போதும் கொண்டாடப்பட்டு வரும் படம் 'பதேர் பாஞ்சாலி'. சத்யஜித் ரே இயக்கிய படம். 1955ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சுபிர் பானர்ஜி, கனு பானர்ஜி, கருணா பானர்ஜி இவர்களுடன் முக்கிய கேரக்டரில் நடித்தவர் உமா தேஸ்குப்தா. இவர் துர்கா என்ற இளம் பெண்ணாக நடித்தார். முக்கிய கேரக்டர்களுக்கு இணையாக அப்போது இவர் கேரக்டர் பேசப்பட்டது.
பதேர் பாஞ்சாலி படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. ஆனாலும் துர்கா கேரக்டர் இன்றவுளம் ரசிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது. கோல்கட்டாவில் குடும்பத்தினருடன் வசித்து வந்த உமா கடந்த சில வருடங்களாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிசிக்கை பெற்று வந்தார். இந்த நிலையில் கோல்கட்டா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. உமாவின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். உமா இறந்து விட்டாலும் துர்கா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.