லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஜோஷி இயக்கத்தில், நடிகர் திலீப் தயாரிப்பில், கடந்த 2008 நவம்பர் 5ம் தேதியன்று வெளிவந்த 'ட்வென்டி: 20' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 16 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதனை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. 'எம்எம்' (மம்முட்டி, மோகன்லால்) என்று பெயர் வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இப்படத்தின் தொடக்க விழா பூஜை நேற்று நடந்தது. மோகன்லால் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இந்த படத்தில் நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹூசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், இயக்குனர் பிரகாஷ் பெலவாடி உள்பட பலர் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப், சி.ஆர்.சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணைந்து தயாரிக்கின்றனர். மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கொச்சி, இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டில்லி ஆகிய பகுதிகளில் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.