அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லை. அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார், எம்ஜிஆரின் வாரிசு என்று அறிவித்துக் கொண்டு சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட எம்ஜிஆரின் தோற்றத்தை கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவரால் சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
காரணம் அவர் சினிமாவுக்கு வந்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது “நான் யார் சிபாரிசும் இல்லாமல் சுயமாக ஜெயித்தேன். எனது வாரிசும் அப்படியே ஜெயிக்க வேண்டும் என்ற விரும்புகிறேன். அப்படி அவன் ஜெயித்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது நான்தான்” என்று கூறினார்.
எம்.ஜி.சக்கரபாணிக்கு 7 மகன்கள், அதில் இவர் 5வது மகன். சென்னை, மைலாப்பூர் பி.எஸ்.உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து அதில் டிப்ளமோ பெற்றவர். ஆனால் அவருக்கு சித்தப்பா எம்.ஜி.ஆர் போல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. 'மீனவன் மகன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நின்று போனது. அதன்பிறகு “குங்குமம் கதை சொல்கிறது” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை அப்போதைய பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி இருந்தார். படாபட் ஜெயலட்சுமி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து போர்க்களம், கரடி, அவள் ஒரு கவரிமான் போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு அவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. நடிகை படாபட் ஜெயலட்சுமியின் தற்கொலைக்கு எம்.ஜி.சுகுமாருடன் இருந்த காதலும், பிரிவும்தான் என்று கூறப்பட்டது. இது எம்.ஜி.சுகுமாரின் கேரியரை பாதித்தது. எம்.ஜி.ஆரும் அவரை சுத்தமாக ஒதுக்கி வைத்தார். எம்ஜிசி. சுகுமார், தனது 60வது வயதில் காலமானார்.