விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

'உத்தம புத்திரன்' வெற்றி, 'தர்ம வீரன்' தோல்வி படத்திற்கு பிறகு பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம், 'ஆர்யமாலா'. பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்தது. புராணக் கதையின் அடிப்படையில் உருவான படம் இது.
சிவபெருமான் தேவலோக நந்தவனத்தைக் காவல் காப்பதற்காக காத்தவராயனை உருவாக்கினார். அங்கு வரும் சப்தகன்னிகளில் இளங்கன்னி என்ற தேவலோகப் பெண்ணைக் காதலிக்கிறான், காத்தவராயன். காதலிக்க முயற்சிக்கும்போது, அவள் தன்னை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்கிறாள். பின் அவள் மீண்டும் இளவரசியாகப் பிறக்கிறாள். ஆர்யமாலா என்ற அவளை, காத்தவராயன் மீண்டும் காதலிக்கிறான்.
இப்படி இளங்கன்னி தண்ணீர் முழ்கி பிறப்பதும், பின்பு காத்தவராயன் காதலிப்பதுமாக இருந்து கடைசியில் இதற்கு பகவான் விஷ்ணு எப்படி தீர்வு காண்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காத்தவராயனாக பி.யு.சின்னப்பா நடித்தார். ஆர்யமாலாவாக எம்.எஸ்.சரோஜினியும் நடித்தார். 1941ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படம் 1958ம் ஆண்டு 'காத்தவராயன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன், சாவித்திரி, கண்ணாம்பா, எம்.என்.ராஜம், ஈ.வி.சரோஜா, தங்கவேலு, சந்திரபாபு நடித்த இதை டி.ஆர்.ராமண்ணா தனது ஆர்.ஆர்.பிச்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் முதலில் காத்தவராயனாக எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. படத்தில் சில மாறுதல்களை எம்ஜிஆர் செய்யச் சொன்னார். குறிப்பாக பழைய ஆர்யமாலாவில் காத்தவராயன் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவராக நடித்திருப்பார். அதை மாற்றி அவனை வீரனாக காட்ட வேண்டும், நிறைய சண்டை காட்சிகள் வைக்க வேண்டும் என்றார்.
இதனால் இயக்குனர் ராமண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் படத்தில் இருந்து விலகினார். இதனால் சிவாஜி நடிக்க வைக்கப்பட்டார். முன்பு வந்த ஆர்யமாலாவை விட அதிக காட்சிகள், அதிக பாடல்கள், நடனங்கள் சேர்த்து இந்த படம் உருவானது. பெரிய வெற்றியும் பெற்றது.