2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் |
1950களில் எம்ஜிஆர் நடிகராகவும், கருணாநிதி வசனகர்த்தாவாகவும் சினிமாவில் பயணித்தனர். சினிமாவிலும், அரசியலிலும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து 'மேகலா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இதில் வி.என்.ஜானகி, எம்.ஜி.சக்ரபாணி, பத்திரிகையாளர் ராஜாராம் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர்.
இந்த நிறுவனம் ஜூபிடர் பிலிம்சுடன் இணைந்து தயாரித்த முதல் படம் 'நாம்'. இதில் எம்ஜிஆர், வி.என். ஜானகி, எம்.என். நம்பியார், பி.எஸ். வீரப்பா, எம்.ஜி. சக்ரபாணி, பி.கே. சரஸ்வதி, எஸ்.ஆர். ஜானகி, ஆர்.எம். சேதுபதி, எஸ்.எம். திருப்பதிசாமி, டி.எம். கோபால், எம். ஜெயஸ்ரீ, ஏ.சி. இருசப்பன், எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், டி.கே. சின்னப்பா ஆகியோர் நடித்தனர்.
அன்றைய எழுத்தாளர் காஷியின் "காதல் கண்ணீர்" என்ற நாவலை தழுவி உருவான இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை கருணாநிதி எழுதினார்.
ஒரு ஜமீன் வீட்டில் பணியாற்றும் எம்ஜிஆருக்கு தான்தான் அந்த ஜமீனின் வாரிசு என்பது தெரிய வரும். ஆனால் அதற்கான ஆதாரங்களை வில்லன்கள் மறைத்து விடுவார்கள். அதை கண்டுபிடித்து எப்படி அவர் ஜமீன் வாரிசாகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படத்திற்கு பிறகு மேகலா பிக்சர்ஸ் ஒரு சில படங்களை தயாரித்தது, பின்னர் எம்ஜிஆர் பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை எம்ஜிஆரும், பூம்புகார் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை கருணாநிதியும் தனித்தனியாக தொடங்கினார்கள்.