அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் பெரும் தோல்வி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியாமல் இருந்தது 'இந்தியன் 2' படம் வெளிவரும் வரை. அந்தப் படம் ஏற்படுத்திய தோல்வி ஷங்கர் இத்தனை வருடங்களாய் காப்பாற்றி வைத்திருந்த பெருமையையும் கொஞ்சம் இழக்க வைத்தது.
தெலுங்கில் அவர் முதன் முறையாக இயக்கி வரும் 'கேம் சேஞ்சர்' படம் எப்படி வரப் போகிறது என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களும் ஒரு கேள்வியுடனேயே பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் 'கேம் சேஞ்சர்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ரா ரா மச்சா' என்ற பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. தெலுங்கில் யு டியூபில் அந்தப் பாடல் இரண்டு நாட்களில் 24 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 17 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் வந்த 'இந்தியன் 2' பாடல்களுக்கு பெரிய வரவேற்பும், யு டியுபில் பார்வைகளும் கிடைக்கவில்லை. அதே சமயம் 'கேம் சேஞ்சர்' பாடலுக்கு தெலுங்கு, ஹிந்தியில் கிடைத்துள்ள வரவேற்பு ராம் சரண் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.