வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அவ்வப்போது இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சென்னையில் பல நிகழ்ச்சிகளை நடத்திய அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார். இந்த நிலையில் கடந்த செப்.,14ம் தேதி கும்பகோணத்தில் தனியார் கல்லூரியில் 'இளையராஜாவின் இசை விருந்து' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இளையராஜாவின் நிகழ்ச்சியை காண, ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக லேசான மழை, விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் மழை கொட்டியது. ஆனாலும், ரசிகர்கள் மழையில் நனைந்தபடி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை உற்சாகமாக ரசித்தனர். இதனை பாராட்டிய இளையராஜா, இனி எல்லா ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது; நன்றி. இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.