லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
‛96' புகழ் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‛மெய்யழகன்' படம் வரும் செப்., 27ல் ரிலீஸாகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. இதற்காக ஐதராபாத்தில் இப்பட புரொமோஷனில் ஈடுபட்டார் கார்த்தி. அங்கு ஒரு நிகழ்வில், தொகுப்பாளர் கார்த்தியிடம், ‛உங்களுக்கு லட்டு வேணுமா' எனக் கேட்டார். அதற்கு, கார்த்தி 'லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ்வான விஷயம், அதை தவிர்த்து விடுவோம்' என சிரித்தபடி பதில் அளித்தார்.
இதற்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பதியில் விரதம் இருந்து வரும் பவன் கல்யாண் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு சென்சிட்டிவ்வான விஷயமா. ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகராக கார்த்தியை மதிக்கிறேன். ஆனால் சனாதனம் என்று வரும்போது யோசித்து பேசுங்கள்” என கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் கார்த்தி மன்னிப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‛‛பவன் கல்யாண், உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நானும் கடவுள் வெங்கடேஸ்வரரின் பக்தனே. நமது பண்பாட்டின் மீது எப்போதும் பிடிப்புடனே இருக்கிறேன், வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.