வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். சமீபத்தில் திருமண செய்து கொண்டார் இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரகுல் ப்ரீத் சிங் தான் மிஸ் செய்த படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, " கடந்த 2016ம் ஆண்டில் ஹிந்தியில் வெளிவந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படமான எம். எஸ். தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி படத்தில் முதலில் திஷா பதானி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால் அந்த சமயத்தில் தெலுங்கில் ராம் சரணுடன் ‛புரூஸ்லி' படத்தில் நடித்து வந்ததால் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. ஆனால், இன்னும் அந்த நல்ல படத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தப்படுகிறேன்" என இவ்வாறு தெரிவித்திருந்தார்.