மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

முன்னணி பாலிவுட் நடிகை திஷா பதானி. எம்.எஸ்.தோணி, பாகி 2, குங்பூ யோகா, பாரத், ராதே கல்கி ஏடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'கங்குவா' தமிழ் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவருக்கு, பரேலியில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்ன கடந்த 12ம் தேதி ரோஹித் கோதாரா-கோல்டி பரார் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். மேலும் திஷா பதானியின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் யார் என்பதை அடையாளம் கண்டனர்.
அதில் ஒருவர் ரோஹ்தக்கில் உள்ள கானியைச் சேர்ந்த ரவீந்தர் என்பதும் மற்றொருவர் சோனிபட்டில் உள்ள இந்தியன் காலனியைச் சேர்ந்த அருண் என்றும் தெரியவந்தது.
இவர்களை பிடிக்க டில்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய 3 மாநில போலீசார் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. சிறப்பு படையினர் 3 மாநில எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்தநிலையில் டில்லி அருகே காசியாபாத்தில் உள்ள டிரோனிகா நகரில் பதுங்கி இருந்த ரோஹித் கோதாரா-கோல்டி பரார் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சிறப்பு படையினர் அதிரடியாக சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், சிறப்பு படையினர் என்கவுன்டர் மூலம் அந்த 2 பேரையும் சுட்டுக்கொன்றனர். சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், ஏராளமான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.