மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
கடந்த வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பேண்டஸி படங்களான கல்கி மற்றும் கங்குவா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. இவரது தங்கை குஷ்பூ பதானி பரேலியில் தனது தந்தையும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜெகதீஷ் பதானியுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் வழக்கம் போல காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கிளம்பி சென்றுள்ளார் குஷ்பூ பதானி. அப்போது அருகில் இருந்த ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் ஒன்று கேட்டுள்ளது. அந்த கட்டிடத்திற்கு நேரடியாக உள்ளே செல்லும் வழி சரியாக இல்லாததால் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்துள்ளார் குஷ்பூ பதானி.
அங்கே 10 மாத குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்து வந்து முதலுதவி செய்து பசியாற்றி பின் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் அந்த குழந்தையை எடுத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இப்படி குழந்தையை காப்பாற்றிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து இந்த குழந்தையை யார் இப்படி கொண்டு வந்து விட்டு சென்றது என தேடி போலீஸார் வருகின்றனர்.