பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்துள்ள நிலையில் கட்சியின் கொடி, பாடலை சமீபத்தில் வெளியிட்டவர், முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரது 69வது படம் குறித்து அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும் வரப்போகிற 2026 சட்டசபைத் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் விஜய், கிறிஸ்தவ முஸ்லிம் மதப் பண்டிகைகளுக்கு வாழ்ந்து தெரிவித்து வருபவர், தமிழ் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கு ஏற்கனவே சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று ஓணம் பண்டிகையொட்டி மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக விஜய் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி வெளியானதில் இருந்து விஜய் ரசிகர் வட்டாரத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. மலையாள ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் தமிழகத்தில் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்கு உங்களிடமிருந்து வாழ்த்து வரவில்லை. ரசிகனாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டனாக இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது . அதனால் இனிவரும் காலங்களிலாவது அனைத்துதரப்பு மக்களின் விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று விஜய் ரசிகர்களே கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.