பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, நடிகைகள் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா ஆகியோர் நடித்துள்ள படம் ‛தி கோட்'. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் காந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய், மது அருந்துவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெங்கட் பிரபு அளித்த பதில்: காந்தி என்ற பெயர் வைத்தால் குடிக்கக் கூடாது என்று உள்ளதா? என் நெருங்கிய நண்பரின் பெயர் கூட காந்தி தான். அவரை மையமாக வைத்து தான் கதையில் விஜய்க்கு காந்தி என பெயர் வைத்துள்ளேன். ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்?. இவ்வாறு அவர் பதிலளித்தார்.
மேலும் வெங்கட் பிரபு பேசியதாவது: இந்த கதையை முதலில் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் தெரிவித்தேன். நாங்கள் முதலில் கதையைப் பற்றி பேசினோம், பிறகு விஜயிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு படமாக நடந்தது. அமெரிக்காவின் எல்லையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்கினோம். டெட்பூல் & வால்வரின் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றிய லோலா என்ற வி.எப்.எஸ் கம்பெனி மூலமாகத்தான் இந்த படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் அமைந்துள்ளன.
நடிகர் அஜித், கோட் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு ‛டேய் சூப்பரா இருக்குடா. விஜய்க்கம், படக்குழுவுக்கும் என்னோட வாழ்த்துகள் சொல்லிருடா'னு மெசேஜ் பண்ணாரு. படம் பார்த்து முடித்தவுடன் இந்த படத்தின் பாடல்கள் எல்லோருக்கும் பிடித்துவிடும். அந்த வகையில், விஷூவல் ட்ரீட்டாக இருக்கும். எந்த ஒரு இடத்திலும் முகம் சுழிக்காத வகையில் இந்த திரைப்படம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.