தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, அவரே நடித்து இயக்கிய ‛காந்தாரா' படம், கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. அதேபோல், ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும் ரிஷப் ஷெட்டி கூறியதாவது: கன்னட திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன; விருதுகள் பெறுகின்றன. ஆனால் எங்கள் படங்களை எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்குவதில்லை. அதனால் யூடியூப்பில் பதிவிடும் அவலத்துக்கு தள்ளப்படுகிறோம். இனிமேல் இந்த மாதிரி படங்களை எடுக்கமுடியுமென தோன்றவில்லை. இரண்டு படங்களை தயாரித்து வருகிறேன். திரைப்படங்கள்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. வருங்காலத்தில் இது எப்படி போகுமென தெரியவில்லை.
எனக்கு தேசிய விருது கிடைத்ததை கவுரவமாக உணர்கிறேன். காந்தாரா படத்தில் நான் என்னுடைய வேலையை செய்தேன். அதில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த விருது சொந்தமானது. எனது படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப குழுவின் சார்பாக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.