Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தர்ஷனின் கைதி எண் பொறித்த டீசர்ட் ; நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தல்

07 ஜூலை, 2024 - 04:25 IST
எழுத்தின் அளவு:
Bengaluru-parents-dress-baby-in-Darshan's-'6106'-jail-clothes-for-photoshoot,-in-the-soup-as-police-notified


கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வரும் நடிகர் தர்ஷன், தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தொடர்ந்து ஆபாச செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு 6106 என்கிற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் தற்போது வெளியில் கசிந்து அவரது ரசிகர்கள் பலரும் இதனை தங்களது உடலில் டாட்டூவாக குத்திக்கொண்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிக் கொண்டும் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சில திரைப்பட இயக்குனர்கள் இந்த கைதி எண்ணை தங்களது திரைப்படத்திற்கு டைட்டிலாக பதிந்து வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறிய குழந்தை ஒன்றுக்கு இந்த கைதி எண் பொறிக்கப்பட்ட கைதி டிரஸ் ஒன்று அணிவிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதில் தர்ஷனை குறிப்பிடும் விதமாக தி பாஸ் என்கிற வார்த்தையும் எழுதப்பட்டுள்ளது.

என்னதான் நடிகர் மீது அபிமானம் என்றாலும் தங்களது குழந்தைக்கு தற்போது சிறையில் இருக்கும் ஒரு கைதியின் எண் கொண்ட உடையை அணிவிப்பது எல்லாம் தவறான முன்னுதாரணம் என்றும் இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திலீப் படத்தின் கதாசிரியராக மாறிய ஒரு அடார் லவ் நாயகிதிலீப் படத்தின் கதாசிரியராக மாறிய ... சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த காமெடி நடிகருக்கு குவியும் கண்டனம் சுயநலவாதி என பஹத் பாசிலை விமர்சித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)