லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்ததும், அப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்து விட்டு துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் பங்கேற்க புறப்பட்டு சென்றார் அஜித்குமார். அங்கு கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றபோது விபத்திலும் சிக்கினார். என்றாலும் காயம் ஏதுமின்றி தப்பினார். அதோடு அஜித்தின் அணி அந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதையடுத்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸிலும் பங்கு பெற்றார்.
இந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார். அதையடுத்து சென்னையில் உள்ள ஒரு ரேஸ் மைதானத்திற்கு சென்ற அஜித்குமார் தனது மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் காரை ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்துள்ளார். அவர் ரேஸ் மைதானத்தில் வேகமாக கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.