மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் நாட்டில் பிரபலமான ஸ்பா பிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வதே கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழுவினரும் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களாக இந்த போட்டிக்காக அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வந்தார். இந்த பயிற்சியின்போது சிறிய விபத்தையும் சந்திதார்.
இந்தநிலையில் நேற்று நடந்த போட்டியில் அஜித் அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்து பி2 போடியம் பினிஷிங்கை பிடித்தனர். உலக கார் பந்தைய மேடைகளில் இது இந்தியாவிற்கு முக்கியமான தருணம் என்கிறார்கள்.
போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஏற்கனவே போச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டியிலும் அஜித் அணி 3வது இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.