தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை கோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்ட நிலையில் அந்த வீடு பிரபுவிற்கு சொந்தமானதால் அந்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், 'அன்னை இல்லம் எனது வீடு அல்ல, தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார்.
இதேப்போல் பிரபுவும் மனு தாக்கல் செய்தார். அதில், எனது தந்தை சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்தார். இதற்கு எனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து எனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. எனவே, அன்னை இல்லத்தின் முழு உரிமை எனக்கு மட்டுமே உள்ளது. என் அண்ணன் வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிமன்றம் ராம்குமாரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ராம்குமாரும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை கோர்ட் ரத்து செய்தது. மேலும் பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




