லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு படங்களில் நடித்து வந்த
சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு
பாகங்களிலும் வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த
ஆகஸ்டு மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா,
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த
வகையில், தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் அவர் நடிக்கப்
போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த
படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அசோக் செல்வன், பஹத்
பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, சோபிதா துலிபாலா நாயகியாக
நடிக்கப் போகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.