ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி | பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம் | பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர் | மனோஜ் பாரதி உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி | அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் |
இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. முதல் பாகம் மட்டுமே வெளியாகி உள்ள இந்த படத்தில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் வரதராஜ மன்னார் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் பிரபாஸின் நண்பராக நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார். அதே சமயம் இந்த படத்தில் சிறு வயது பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் தெலுங்கு சிறுவனான கார்த்திகேயா என்பவர் நடித்தார். இந்த நிலையில் தற்போது தான் இயக்கியுள்ள 'எம்புரான்' படத்திலும் இவரை அழைத்து நடிக்க வைத்துள்ளார் பிரித்விராஜ். ஆச்சரியமாக இந்த படத்திலும் பிரித்விராஜின் சிறு வயது கதாபாத்திரத்தில் தான் கார்த்திகேயா நடித்துள்ளார்.
சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் கார்த்திகேயாவை எம்புரான் படத்தில் நடிக்க வைத்தது குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “ஒரு நாள் இரவு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு போன் செய்து எனக்கு சலார் படத்தின் வீடியோ கிளிப் ஒன்றை அனுப்பி வையுங்கள் என்றேன். அவர் அனுப்பி வைத்த சிறிய வீடியோவில் என்னுடைய இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் கார்த்திகேயாவை பார்த்தேன்.
உடனடியாக பிரசாந்த் நீலுக்கு போன் செய்து இந்த பையனை வைத்து நீங்கள் என்ன எடுக்க முடியுமோ அதை எல்லாம் உடனே எடுத்து விடுங்கள். விரைவில் என்னிடம் இவனை அனுப்பி விடுங்கள். நான் எம்புரான் படத்திலும் இவனை பயன்படுத்த போகிறேன் என்று கூறிவிட்டேன். மிகச் சிறப்பான நடிப்பை கார்த்திகேயா வெளிப்படுத்தியுள்ளான். பின்னாளில் இவன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வராவிட்டால் தான் எனக்கு ஏமாற்றம் ஏற்படும்” என்று கூற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திகேயா கண் கலங்கியபடி பிரித்விராஜூக்கு நன்றி தெரிவித்தார்.