வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛தி கோட்'. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செப்., 5ல் படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து முதல்பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இருதினங்களுக்கு முன் ‛‛சின்ன சின்ன கண்கள்'' என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன்படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவன் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல்நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒருமணிநேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது. அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.




