ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் தற்போது நடித்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் அட்லி.
இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்தும் இன்னொரு ஹீரோவாக நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமோ அதை முக்கியத்துவம் ரஜினிக்கும் உள்ளதாம்.
சிக்கந்தர் படத்திற்கு பிறகு இப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அட்லி, இப்படத்தில் நடிக்க ரஜினியிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் ரஜினியும் இணைவது உறுதியானால், இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.