வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். படம் ரிலீஸ் குறித்து கடந்த வாரம் முதல் பல்வேறு தகவல்கள் வெளியாகின. படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்றார்கள். அதன்படியே படத்தை டிசம்பர் 6க்கு தள்ளி வைக்கிறோம் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படம் தள்ளிப் போனதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தன் நண்பருக்காக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் செய்து தற்போதைய புதிய ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளார். அவரது உறவினரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்குப் போவதைத் தவிர்த்தார் அல்லு அர்ஜூன். தற்போது இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை என்கிறார்கள்.
மேலும் படத்தின் வேலையை திட்டமிட்டபடி முடிக்க முடியாததும் ஒரு காரணமாம். இப்படத்திற்காக பஹத் பாசில் கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க தேதிகளைக் கொடுத்ததால் 'புஷ்பா 2' குழு கேட்ட போது அவரால் தேதிகளைத் தர முடியவில்லையாம். சமீபத்தில்தான் அவர் தேதிகளை ஒதுக்கியதாகவும் ஒரு தகவல்.
இப்படி சில காரணங்களை அடுத்து படத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேல் நஷ்டம் வரலாம் என்பது டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.




