விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் தற்போது இந்தியன் 3-ஆகவும் விரிவடைந்துள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை 12ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மே 22ம் தேதியான இன்று ‛இந்தியன் 2' படத்திலிருந்து ‛பாரா...' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பா.விஜய் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத், ஸ்ருத்திகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். தாய் மண்ணிற்காக போராடும் வீரனை பற்றிய தேச பக்தி பாடலாக வெளியாகி உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை, குரல் ஆகியவை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ‛‛என் தாய் மண் மேல் ஆனை... இது தமிழ் மானத்தின் சேனை... அட வெள்ளை இரத்தம் தொட்டு... இனி வாளில் என்று சானை...'' என்ற வரிகள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி ‛பாரா' பாடல், தெலுங்கில் ‛சவுரா'வாகவும், ஹிந்தியில் ‛ஜாகோ...' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ல் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.