மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் எண்ணற்ற விருதுகளை வென்றவர். சர்வதேச விருதுகள், இந்திய விருதுகள் என பல விருதுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படிப்பட்ட விருதுகளைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “விருதுகளை அறையில் வைத்துள்ளேன். சில விருதுகள் என்னிடம் வரவேயில்லை. அந்த விருதுகளை அப்படங்களின் இயக்குனர்களே வைத்துக் கொண்டுள்ளார்கள். சர்வதேச விருதுகளை துபாயில் வைத்துள்ளேன். அவற்றை தங்கம் என நினைத்து எனது அம்மா டவலில் சுற்றி வைத்துள்ளார். மற்ற விருதுகள் சென்னையில் உள்ள அறையில் இருக்கின்றன” என்றார்.
ஏஆர் ரஹ்மானுக்காக அளிக்கப்பட்ட விருதுகளை சில இயக்குனர்கள் அவரிடம் திருப்பித் தராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் அளித்த பேட்டியில் பேட்டியாளர் ரஹ்மான் வாங்கிய தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பற்றி தவறான எண்ணிக்கையைச் சொன்னார். ஏஆர் ரஹ்மான் அவற்றைத் திருத்தி சரியான எண்ணிக்கை என்ன என்பதையும் கூறினார். தான் வாங்கிய விருதுகள் எத்தனையெத்தனை என்பதை மிகவும் ஞாபகமாக வைத்திருக்கிறார் ஏஆர் ரகுமான்.
இந்தப் பேட்டியைப் பார்த்த பிறகாவது ரஹ்மானின் விருதுகளை வைத்திருக்கும் அந்த இயக்குனர்கள் அவற்றைத் திருப்பித் தருவது நல்லது.