டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத் திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக நடித்து வருபவர் மோகன்லால். விதவிதமான படங்கள் விதவிதமான கதாபாத்திரங்கள் என அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு ஒரு பக்கம் கமர்சியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இன்னொரு பக்கம் கலை கலை படைப்புகளுக்கும் செம முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். மேலும் மோகன்லால் ஒரு இயக்குனராகவும் மாறி தானே நடித்து பரோஸ் என்கிற வரலாற்று படத்தையும் இயக்கி முடித்து விட்டார். அந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
தற்போது பிரித்விராஜ் டைரக்சனில் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான், ஜோஷி டைரக்ஷனில் ரம்பான் மற்றும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் தனது 360வது படம் என பல படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். நேற்று அவரது 64வது பிறந்த நாள் என்பதால் பல மொழி திரையுலகத்திலிருந்தும் பிரபலங்கள் பலர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மோகன்லாலுக்கு தனது சோசியல் மீடியாவில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “கிட்டத்தட்ட 40 வருடங்களாக விமர்சிக்கின்ற மற்றும் விவேகமான பார்வையாளர்கள் மத்தியில் முன்னணி மனிதனாக வலம் வந்திருக்கிறார். 400 படங்கள் என்று சொன்னால் சிலருக்கு நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் அவர் பிரபல நடிகர் பிரேம் நசீர் நடித்துள்ள 500 படங்கள் என்கிற சாதனையையும் முறியடிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.




