ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், 'வடக்கன்'. குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர். டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரிக்கிறார் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வரும் வட இந்தியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் தலைப்பை மாற்றினால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என்று கூறிவிட்டனர். வட இந்திய மக்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து தயாரிப்பாளர் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 24ம் தேதி வெளி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.