சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
'ஈடன் பிளிக்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'வானவன்'. சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி, மாஸ்டர் ஷக்தி ரித்விக் , 'லவ் டுடே' பிராத்தனா நாதன், கல்கி ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிட் வசந்தா இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. படம் குறித்து இயக்குனர் சஜின் சுரேந்திரன் கூறியதாவது : யோகி பாபுவின் நகைச்சுவையுடன் பீல் குட் பேண்டஸி ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான 'மாஸ்குரேட்' சீரிஸை இயக்கி உள்ளேன். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் படமாக இது இருக்கும். என்றார்.