லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கமல்ஹாசன் - ஷங்கர் ஆகிய இருவரும் இந்தியன் படத்தில் முதன்முதலாக இணைந்த நிலையில் தற்போது இந்தியன்-2வில் மீண்டும் இணைந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்தியன்-2 படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதால், அந்த கதையை வைத்து இன்னொரு பாகத்தையும் உருவாக்குவதற்கு இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது கமலிடத்தில் இந்தியன்- 3 படத்தில் நடிப்பதற்கும் 40 நாட்கள் கூடுதலாக கால்சீட் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளில் நடைபெறும் இந்தியன்- 3 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் கமல். மேலும் இந்தியன்-2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரும் நிலையில், இந்தியன்-3 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாகவே எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் 233வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.