புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை கச்சேரி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதை விடவும் மிக அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதித்தார்கள். அதனால் கடும் நெருக்கடியும், சர்ச்சைகளும் எழுந்தது. போலி டிக்கெட்டுகள் மூலமும் பலரும் விழாவுக்கு போனதும் மற்றொரு காரணமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியால் ரஹ்மான் மீது கடும் அதிருப்தி நிலவியது.
இந்நிலையில் இவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், 2018ல் நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானின் இசை கச்சேரி நடக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இதுதொடர்பாக ரஹ்மானுக்கு ரூ.29.50 லட்சம் பணமும் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அப்போது அந்த நிகழ்ச்சி திடீரென ரத்தாகிவிட்டது. அதன்பின் ரஹ்மான் அந்த பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது பணத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தி ரஹ்மான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான் தரப்பு விளக்கம்
இதுபற்றி ரஹ்மானின் உதவியாளர் செந்தில் வேலன் அளித்துள்ள விளக்கத்தில், ‛‛நிகழ்ச்சி ரத்தானால் பணத்தை திருப்பி தர வேண்டாம் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.