'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள 'லியோ' படத்தின் இசை வெளியீடு செப்., 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென விழாவை ரத்து செய்தனர்.
போலி டிக்கெட்டுகள் விற்பனை, விஜய் மக்கள் இயக்கத்திற்காக அதிக டிக்கெட்டுகள் தேவை, இட நெருக்கடி, பாதுகாப்பு காரணங்கள், ஏஆர் ரஹ்மான் நடத்திய நிகழ்ச்சியின் தோல்வி என பல காரணங்களால் விழா ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் சிலர் அரசியல் காரணமாக விழா ரத்தானது என்றும் பேசி வருகிறார்கள். படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சில ஏரியாக்களில் வினியோகிக்கக் கேட்டதாகவும் அதைத் தர தயாரிப்பாளர் மறுத்ததாகவும் எனவேதான் விழாவுக்கு அனுமதி தரவில்லை என்றும் சிலர் அரசியல் நெருக்கடி என காரணம் சொல்கிறார்கள். இது அரசியல் குத்து.
அதே சமயம், உள் குத்து ஒன்று இருக்கிறதென்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'லியோ' படத்தை 'எல்சியு' ஆக எடுக்க லோகேஷ் முயற்சித்தாராம். அதைப் பற்றித் தெரிய வந்ததும் இது தன்னுடைய படம் இதில் வேறு எந்த நடிகருக்கும் இடமில்லை என விஜய் கறாராகச் சொல்லிவிட்டாராம். அதனால் லோகேஷ் மிகவும் வருத்தப்பட்டாராம். அதன்பின் படத்தின் சில காட்சிகளை விஜய் மாற்றச் சொன்னதும் அதற்கு லோகேஷ் மறுப்பு தெரிவித்தாராம். இதனால், படத்திற்கு வசனம் எழுதிய ரத்னகுமாரை வைத்து பல காட்சிகளை எடுத்தார்களாம்.
மேலும், 'லியோ' படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினிகாந்த்தின் 171வது படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதாலும் லோகேஷ் மீது கடுப்பில் உள்ளாராம் விஜய். இருவருக்குமான நெருக்கம் நிறையவே குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். 'லியோ' இசை வெளியீடு ரத்து குறித்து லோகேஷ் இதுவரையிலும் டுவிட்டர் தளத்தில் எந்தப் பதிவையும் பதிவிடாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் கோலிவுட்டில்.