காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருப்பவர் கவின். டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானாலும், 2023ல் தியேட்டர்களில் வெளியான 'டாடா' படம் வெற்றியாக அமைந்து அவருக்கு ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது. அதற்கு முன்பு ஓடிடியில் வெளியான 'லிப்ட்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
'டாடா' பிறகு வெளியான 'ஸ்டார்' சுமாரான வெற்றியாகவும், அடுத்து வந்த 'பிளடி பெக்கர்', சமீபத்தில் வந்த 'கிஸ்' தோல்விப் படங்களாகவும் அமைந்தன. 'கிஸ்' தோல்வியை சரிக்கட்ட அவர் தற்போது நடித்து வரும் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள்.
விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிக்கும் 'மாஸ்க்' படத்தின் 'கண்ணுமொழி' என்ற பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. அடுத்து விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா, கவின் நடிக்கும் படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.