பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக இருந்த வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் ஹீரோ அவதாரம் எடுத்ததை அடுத்து, சூரியும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவர் நடிப்புக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்தது. தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் கொட்டுக்காளி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக அவர் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டைலிஷான லுக்கில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் சூரி. அதோடு நலமே சூழ்க் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த புகைப்படங்களுக்கு உண்மையிலேயே இந்த கெட்டப்பில் நீங்கள் ஹீரோ மாதிரி தான் இருக்கிறீர்கள் என்று பெருவாரியான நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தனது ஹேர் ஸ்டைலை வித்தியாசமாக மாற்றிக்கொண்டு கூலிங்கிளாஸ் அணிந்தபடி மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார் சூரி.




