குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியானது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ‛காந்தாரா சாப்டர் 1'. ரூ.125 கோடியில் உருவான இப்படம் 900 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடித்த ருக்மணி வசந்த் தற்போது பான் இந்தியா நடிகையாகி இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தில் வில்லனாக நடித்த குல்ஷன் தேவய்யாவும் தமிழ், தெலுங்கில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
தற்போது தமிழில் மாதவன் நடித்து வரும் லெகசி என்ற வெப் தொடரில் கவுதம் ராம் கார்த்திக், நிமிஷா, அபிஷேக், வையாபுரி ஆகியோருடன் குல்ஷன் தேவய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கிரைம் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த தொடர் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தவிர சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் குல்ஷன் தேவய்யா.




