குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் |

தடையற தாக்க, மீகாமன், தடயம் போன்ற வித்தியாசமான சஸ்பென்ஸ் நிறைந்த ஆக் ஷன் படங்களை எடுத்தவர் இயக்குனர் மகிழ்திருமேனி. கடைசியாக அஜித்தை வைத்து ‛விடாமுயற்சி' படத்தை எடுத்தார். இப்படம் தோல்வி அடைந்தது. இதனால் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவும் ஆக் ஷன் கதையில் உருவாகிறதாம். ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. இந்த படத்தை மும்பையை சார்ந்த மிராக்கில் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனராம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




