பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

2012ல் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய படம் 'கும்கி'. அப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை மதியழகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார் பிரபு சாலமன். இந்த படமும் யானையை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி 2 படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். இதை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என 'கும்கி 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கை வைத்தது. இதை ஏற்ற நீதிமன்றம் 'கும்கி 2' படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது.




