போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. அவர் நாயகனாக நடித்து இந்த வருடம் வெளிவந்த 'மாமன்' படமும் வியாபார ரீதியாக வெற்றி 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது 'மண்டாடி' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு நாயகனாக நடிக்க சில கதைகளைக் கேட்டுள்ளாராம். அவரை நாயகனாக வைத்து படம் தயாரிக்க சில தயாரிப்பு நிறுவனங்களும் தயாராக இருக்கிறார்களாம். ஆனால், சூரி கேட்கும் சம்பளம் அவர்களை யோசிக்க வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
10 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் சூரி. தான் நாயகனாக நடித்த படங்கள் வியாபார ரீதியாக நல்ல வசூலைப் பெற்றதால் கேட்கிறேன் என்றும் சொல்கிறாராம். தியேட்டர் வசூல், ஓடிடி, சாட்டிலைட் உரிமை என அனைத்துமே விற்கப்படுவதும் ஒரு காரணம் என்கிறார்கள். இருந்தாலும் அவ்வளவு சம்பளம் கொடுத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகிறார்கள் என்று தகவல்.
எனவே, சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் தனக்குப் பிடித்த, பொருத்தமான கதைகளைத் தயாரித்து நடிக்கலாம் என சூரி திட்டமிட்டு வருகிறாராம். இதற்கு முன்பு அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'கருடன், மாமன்' ஆகிய படங்களை சூரியின் மேனேஜர் தயாரித்தார். இப்போது சூரியே தயாரிப்பில் இறங்குவது சிலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.