மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள படம் அச்சம் என்பது இல்லையே. இப்படத்திற்கு தற்போது மிஷன் சாப்டர் 1 என்று டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 படத்தின் மேக்கிங் வீடியோவை அப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறையில் அந்த சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறை கைதியாக அருண் விஜய்யும், சிறைத்துறை அதிகாரியாக எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.