சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமானாலும் கடும் போராட்டங்களுக்கு பின்னர் முன்னணி நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்முறையாக ஹரியுடன் அருண் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. யானை படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு சமைத்துக் கொடுத்ததை நெகிழ்வுடன் அருண் விஜய் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நேற்று இரவு படப்பிடிப்பின் போது என் குழுவினருக்கு சமைப்பது மகிழ்வாக இருந்தது... எனக்கு இடம் கொடுத்த அன்பான குடும்பத்திற்கு நன்றி... அவர்கள் தங்கள் அன்பில் மிகவும் பணக்காரர்களாகவும், பெருந்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்... நாம் யார், நாம் என்ன என்பது முக்கியமல்ல. நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் ஒருவருக்கு ஒருவர் பரப்பும் கருணையும் அன்பும் தான்... அன்பைப் பரப்புங்கள்... இந்த அன்பான உள்ளங்கள் அனைத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.." என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித் தான் தன் படங்களின் படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பார். அந்த வழியை அருண் விஜய்யும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.