அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ், தெலுங்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கைத் தவிர ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 2018 ஆண்டு வெளிவந்த 'ஹே ஜுட்' என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார்.
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் இந்தாண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற '2018' படத்தில் கதாநாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'ஐடின்டிட்டி' என்ற படத்தில் த்ரிஷா நடிப்பதாக இன்று(ஜூலை 8) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அகில் பால் - அனஸ்கான் இணைந்து இயக்க உள்ள படம் இது.
இப்படத்தில் நடிக்க உள்ள த்ரிஷாவை வரவேற்று டொவினோ தாமஸ், “த்ரிஷாவுடன் ஒரு அற்புதமான படத்தில் நடிக்க கை கோர்ப்பது உற்சாகமானது. மறக்க முடியாத பயணத்திற்குத் தயாராகுங்கள். மிகவும் உற்சாகமான படப்பிடிப்பிற்காகக் காத்திருக்கிறேன். நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அதிகமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இந்தப் படத்தில் இக்குழுவுடன் இணைவது உற்சாகமாக உள்ளது,” என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.