முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா | தமிழ் பாடல்களில் ஆங்கில ஆதிக்கம் : அனுராக் கேள்விக்கு மணிரத்னம் பதில் | கடவுளுக்கு தெரியும் : குழந்தை விஷயம் குறித்து கேட்ட ரசிகருக்கு சாந்தனு பாக்யராஜ் பதிலடி | கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் |
மதுமிதா இயக்கிய 'மூணே மூணு வார்த்தை' படத்தின் மூலம் அறிமுகமானவர் தர்ஷனா ராஜேந்திரன். அதன் பிறகு கவண், இரும்புதிரை, தீவிரம் படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி மலையாளத்திற்கு சென்றவர் அங்கு முன்னணி நடிகை ஆனார். இதுதவிர வெப் தொடரிலும் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் அறிமுகமாகிறார்.
பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. தர்ஷனா ராஜேந்திரன் நடிகை என்பதுடன் நல்ல பாடகியாகவும் இருக்கிறார். மாயநதி, சர்காஸ் சிர்கா 2020, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெயஹே போன்ற படங்களில் பாடியுள்ளார். விரைவில் தமிழ் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.