100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் நடிகர் என கமல்ஹாசனை அந்தக் காலத்தில் இருந்தே சொல்ல மாட்டார்கள். வித்தியாசமான நடிகர், பரீட்சார்த்த நடிகர் என வெவ்வேறு விதங்களாக அவரது பல திறமைகளை உள்ளடக்கிய விதங்களை மட்டுமே பாராட்டுவார்கள்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, வாலிப வயது வந்ததும் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து பின்னர் தான் கதாநாயகனாக உயர்ந்தார் கமல்ஹாசன். 80களின் ஆரம்பம்தான் அவருக்கு கதாநாயகனாக துவக்கமாக இருந்தது. அப்போது அவர் தனி கதாநாயகனாக நடித்த படங்கள் அதிகமாக வந்தன. சில படங்கள் தோல்வியும், சில படங்கள் வெற்றியும், சில படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்படுபவையாக மாறி மாறி வந்தன.
“வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, சகல கலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, ஒரு கைதியின் டைரி” ஆகிய படங்கள் அப்போதைய முக்கியமான படங்கள். இருந்தாலும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முழுமையான கமர்ஷியல் படமாக கமல் நடித்து 1984ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளிவந்த படம் 'காக்கி சட்டை'. நேற்றுடன் இப்படம் வெளிவந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டது. ராஜ சேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், அம்பிகா, மாதவி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த படம்.
போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்டு முயன்று தோற்றுப் போனவர் கமல்ஹாசன். அதனால், கடத்தல் கும்பல் ஒன்றில் வேலைக்குச் சேர்கிறார். அவரே போலீசுக்கு மிகவும் சவாலாக இருந்து பல கடத்தல் வேலைகளைச் செய்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
கமல்ஹாசனின் கமர்ஷியல் படங்களில் பெரிய வெற்றியைப் பெற்று வெள்ளிவிழாக் கொண்டாடிய படம். சத்யராஜின் 'தகடு தகடு' வசனம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று முன்னணி வில்லன் நடிகராக மாற்றியது. அம்பிகா, மாதவி என இரண்டு கதாநாயகிகள் படத்தில், அம்பிகாதான் கமலின் காதலி.
இளையராஜாவின் இசையில் “கண்மணியே பேசு, பூ போட்ட தாவணி, வானிலே தேனிலா, பட்டு கன்னம், நம்ம சிங்காரி சரக்கு” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. மெலடி பாடல்கள் இன்றும் பலரது போன்களில் பிளே லிஸ்ட்டில் இருக்கும்.
ரஜினிகாந்த் அப்போது இப்படியான பல கமர்ஷியல் சூப்பர் ஹிட்டுகளைக் கொடுத்துக் கொண்டிருந்த போது தானும் சளைத்தவனல்ல என கமல்ஹாசனும் நடித்த ஒரு படம்.