அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது | 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல் | எனது பயோபிக் என்றதும் மிரட்டுறாங்க.... என்னை பேச வைத்து விடாதீர்கள் : சோனா ஆதங்கம் |
விக்ரம் வேதா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தவர் ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்த். இப்போது முதன்முறையாக இயக்குனராக களமிறங்கி உள்ளார். அவரின் முதல் படத்திற்கு 'டெஸ்ட்' என பெயரிட்டுள்ளனர். நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்து இப்படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கின்றனர். கிரிக்கெட் கதை களத்தை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மோஷன் போஸ்டர் உடன் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.