மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக உயர்ந்து டாப் 5 நடிகர்களுக்குள் இடம் பிடிக்க முடியாமல் இன்னமும் கொஞ்சம் தடுமாறித்தான் வருகிறார் சிம்பு. அவருடைய திறமைக்கும், அனுபவத்துக்குமான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களின் வருத்தமாக உள்ளது.
ஆனால், கடந்த சில ஆண்டுங்களாக அவரது படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகின்றன. 2018ல் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்', 2021ல் வெளிவந்த 'மாநாடு', 2022ல் வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. இடையில், 'வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் சிம்புவின் வியாபாரம் குறையவில்லை.
அடுத்து சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள 'பத்து தல' படம் இந்த வாரம் மார்ச் 30ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் 'ஏஜிஆர்' என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையில், கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரிய பவானி சங்கர், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கன்னடத்தில் வெளியான 'முப்டி' படத்தை தமிழுக்கு ஏற்றபடி ஒபிலி கிருஷ்ணா ரீமேக் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.