ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சென்னை: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 6 மாதங்களுக்கு பின் குணமாகி வந்தார். மீண்டும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
யாஷிகாவின் கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 21ம் தேதி யாஷிகா நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.