நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய பாடகர்கள் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி சினிமாவிலும் பிரபல இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு பெற்று வருகின்றனர். இதேபோல மலையாளத்திலும் பிரபல சேனல் ஒன்று நடத்தும் சூப்பர் சிங்கர் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்று வருபவர் பாடகர் நிகில். இவர் பெரும்பாலும் ஹை பிட்ச்சில் பாடப்பட்டிருக்கும் பாடல்களை தேர்வுசெய்து அதை மிகச்சரியாக பாடி ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளிச் செல்வார்.
அப்படி சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் தில்சே படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் பாடிய பாடல் ஒன்றை இம்மி பிசகாமல் அவரைப் போலவே பாடி போட்டியின் நடுவர்களையும் பார்வையாளர்களையும் பிரமிக்க வைத்தார். இந்த வீடியோ தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ள ஏ ஆர் ரஹ்மான் ஆனந்த கண்ணீர் வடிப்பது போன்றும் மகிழ்ச்சியால் இதயம் நிரம்பி இருக்கிறது என்பது போன்றும் எமோஜிகளை தனது பாராட்டுக்களாக பதிவிட்டுள்ளார்.