ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போவது யார்? | மீண்டும் சீரியஸ் கதையில் வடிவேலு? | நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா ஆன மந்த்ரா | அஜித்தின் 65வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முதன்மைக் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தற்போதைய கதாநாயகிகளில் அதிகப் படங்களில் நடித்து வருபவர் இவர்தான்.
ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ள 'ரன் பேபி ரன்' மற்றும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி 3ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. இதற்கு முன்பாக டிசம்பர் 29ம் தேதி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படமும், டிசம்பர் 30ம் தேதி 'டிரைவர் ஜமுனா' படமும் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசியில் அந்த வெளியீட்டிலிருந்து 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் விலகியது. 'டிரைவர் ஜமுனா' படத்தை ஏற்கெனவே ஒரு முறை வெளியீட்டுத் தேதி அறிவித்து தள்ளி வைத்ததால் அந்தப் படத்தினை டிசம்பர் 30ம் தேதி வெளியிட்டார்கள்.
இந்த முறை 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' எந்த விதத்திலும் தங்களது தேதியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. மீண்டும் ஒரு புதிய போஸ்டரை அவர்கள் வெளியிட்டு அதை உறுதி செய்துள்ளார்கள்.
இதனிடையே அடுத்தவாரம் ஜன., 26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட 'பர்ஹானா' படம் அன்றைய தினம் வெளியாகவில்லை. பிப்ரவரி மாதக் கடைசிக்கு தள்ளிப் போகலாம் என தெரிகிறது. மேலும், இந்த வருடத்தில் ஐஸ்வர்யா நடித்து வரும், “மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, சொப்பன சுந்தரி” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.