ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
கொரோனா சிகிச்சைக்காக மட்டுமே அத்தொகை பயன்படுத்தப்படும் என அறிவித்த முதல்வர் வசூலான தொகை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகம் சார்பாக நடிகர் சிவக்குமார் குடும்பம், ரஜினிகாந்த், அஜித், விக்ரம், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டவர்களும் நிதியுதவி வழங்கினர்.
இன்னும் கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் எந்த ஒரு நிவாரண உதவியையும் வழங்காமல் இருக்கிறார்கள். அதே போல முன்னணி நடிகைகளும் வழங்கவில்லை. இருந்தாலும் நடிகைகள் நிதி அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தலா 1 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்கள். நிதி அகர்வால் இந்த வருடம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரவர் சக்திக்குத் தகுந்தபடி 100 முதல் கோடிகள் வரையில் பலர் வழங்கி வருகிறார்கள். இன்னும் சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் எந்த ஒரு தொகையையும் அறிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள்.