ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் திட்டம் இரண்டு. இப்படம் ஓடிடியில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். மர்டர் மிஸ்டரி திரில்லர் வகை படம். உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. உயிர்த்தோழி ஒருவர் காணாமல் போகிறார். அதை விசாரிக்கையில் அவர் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலை தொடர்பான விசாரணை தான் படம்.
போலீசாக இருந்தாலும் வழக்கமாக படங்களில் காட்டப்படும் பெண் போலீசாக அல்லாமல் காதல், எமோஷனல் எல்லாவற்றையும் காட்டவேண்டிய ஒரு கதாபாத்திரம். கொரோனா காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு சினிமா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும் தியேட்டர்களில் ரிலீசாக தான் ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு சாதகமாக இல்லையே... படம் நன்றாக இருந்தால் போதும். தியேட்டர் ரிலீஸ் இல்லாவிட்டாலும் எல்லோரையும் சென்று சேர்கிறது.
ஒரு படத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டே இருப்பது என்பது தயாரிப்பாளருக்கு பலத்த இழப்பை தரும். சூரரை போற்று, க/பெ.ரணசிங்கம், இப்போது சார்பட்டா பரம்பரை என ஓடிடியிலும் படங்கள் ஹிட் அடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்